சினிமா செய்திகள்
கேரளா வெள்ள சேதத்துக்குடைரக்டர் ‌ஷங்கர்–உதயநிதி உதவி

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு டைரக்டர் ‌ஷங்கர் மற்றும் உதயநிதி தலா ரூ.10 லட்சம் வழங்கினர்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்–நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் தாராள மனப்பான்மையுடன் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். டைரக்டர் ‌ஷங்கர் ரூ.10 லட்சம் உதவி தொகையை, ‘ஆன் லைன்’ மூலம் நேற்று அனுப்பி வைத்தார்.

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.