சினிமா செய்திகள்
பாட்டி நடிப்பதை பார்க்கபடப்பிடிப்பு தளத்துக்கு வந்த கீர்த்தி சுரேஷ்

தனது பாட்டி நடிப்பதை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கு கீர்த்தி சுரேஷ் வந்தார்.
சாருஹாசன் தாதாவாக நடித்த படம், ‘தாதா-87.’ இதில், நடிகை மேனகாவின் தாயாரும், கீர்த்தி சுரேசின் பாட்டியுமான சரோஜா (வயது 80), சாருஹாசனின் மனைவியாக நடித்து இருக்கிறார். பாட்டி நடிப்பதை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கு கீர்த்தி சுரேஷ் வந்தார். ஒருநாள் முழுவதும் அவர் பாட்டியுடனே இருந்தார். பாட்டிக்கு கீர்த்தி சுரேசே சேலை கட்டி விட்டார்.

நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை நடிகர் ஜனகராஜ், இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தாதாவாக சாருஹாசன் நடித்து இருக்கிறார். “பெண்களை அனுமதியில்லாமல் தொட்டால், அவனை தீவைத்து கொளுத்துவேன்” என்று படத்தில் வீர வசனம் பேசியிருக்கிறார்.

“படம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பே திரைக்கு வர இருந்தது. சாருஹாசன், சரோஜா இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவர்கள் குணமாகி வரும் வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது” என்கிறார், படத்தின் டைரக்டர் விஜய்ஸ்ரீ-ஜீ. ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்ய, லியான்ட்டர் லீ மார்ட்டின் இசையமைத்து இருக் கிறார். கலைச்செல்வன் தயாரித்து வரு கிறார்.

அரசியல் கலந்த இந்த காதல் படம், அடுத்த மாதம் (செப்டம்பர்) திரைக்கு வர இருக்கிறது.