சினிமா செய்திகள்
படுக்கைக்கு அழைத்தார் : பட அதிபர் மீது நடிகை ‘செக்ஸ்’ புகார்

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை ஸ்ரீரெட்டிக்கு பிறகு நடிகைகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்து உள்ளனர்.
நடிகைகள் பாதுகாப்புக்கு மலையாளம் மற்றும் தமிழ் பட உலகில் சங்கங்களும் ஆரம்பித்து உள்ளனர். சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினரும் திரையுலகில் நடிக்கும் பாலியல் குற்றங்களை கண்டித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்னொரு நடிகையும் தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். அவரது பெயர் பாயல் ராஜ்புட். இவர் பஞ்சாபி படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘ஆர்எக்ஸ் 100’ என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் ஒரு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பாயல் ராஜ்புட் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘‘நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் தொல்லைகள் குறித்து துணிந்து பேசிய பிறகும் நடிகைகளுக்கு செக்ஸ் தொந்தரவுகள் நடக்கத்தான் செய்கிறது. எனக்கும் அதுபோன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கில், ‘ஆர்எஸ் 100’ படத்தில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அழைத்து அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினார். அதற்கு பிரதிபலனாக படுக்கையில் தன்னை திருப்திபடுத்த வேண்டும் என்றார். அது எனக்கு அதிர்ச்சி அளித்தது. நான் திறமையால் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். உங்கள் ஆசைக்கு இணங்க மாட்டேன் என்று கண்டிப்போடு கூறிவிட்டேன். இப்படி அவர் என்னை அழைத்தது மனதுக்கு வேதனையை அளித்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.