சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ பற்றி டைரக்டர் ஷங்கர் புதிய தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில், ‌ஷங்கர் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் எமிஜாக்சன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. ‘2.0’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

2.0 படத்தின் டீசர் எப்போது வெளிவரும்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்டு 15–ந் தேதி டீசர் வெளிவரும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆகஸ்டு 15–ந் தேதி, டீசர் வெளிவரவில்லை. இதற்கு காரணம், கேரளாவின் மழை–வெள்ளம். ‘‘இந்த சமயத்தில் டீசரை வெளியிட வேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். அதனால், டீசர் வெளியீட்டு விழா தள்ளிப்போடப்பட்டது.

இந்த நிலையில், டைரக்டர் ‌ஷங்கரிடம் ஒரு ரசிகர், டீசர் எப்போது வரும்? என்று கேட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ‌ஷங்கர், ‘2.0’ டீசர் செப்டம்பர் 13–ந் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று வெளிவரும்’’ என்றார்.