சினிமா செய்திகள்
ஹாலிவுட் நடிகைகள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு சிறை தண்டனை

ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு 18 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

ஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ஜெனிபர் லாரன்ஸ், கிர்ஸ்டென் டன்ஸ்ட், கேட் அப்டன் உள்ளிட்ட பல நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஹேக்கர்களால் திருடப்பட்டு இணையத்தில் கசியவிடப்பட்டன. சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் நார்த் பிரான்போர்டு பகுதியை சேர்ந்தஜார்ஜ் காரோபேன்  என்ற இளைஞருடன் சேர்த்து 4 பேர் கைது செய்யப்பட்டனர்

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஆப்பிள் கணக்கு பாதுகாப்பு துறையிலிருந்து பேசுவதை போல் ஈமெயில் அனுப்பி கடவுச்சொல்லை நடிகைகளிடம் இருந்து பெற்றுள்ளனர். இதுபோன்று நடிகைகளிடம் இருந்து பெற்ற கடவுச்சொல்லை கொண்டு, ஹாலிவுட் பிரபலங்களின் 200 ஐகிளவுடு  கணக்குகளை ஹேக் செய்துள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது விவாதத்தை முழுவதுமாக கேட்ட நீதிபதி, குற்றவாளிக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.   3 ஆண்டுகளுக்கு குற்றவாளி சமூக சேவை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்