சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன்- அருண்விஜய் மோதலா?

நடிகர்களுக்கிடையே இருக்கும் உறவை திசைமாற்றி சிதைக்காதீர்கள் என அருண் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். #ivakarthikeyan #ArunVijay


அதிரடி சண்டைகளுடன்  சிவகார்த்திகேயனின் சீமராஜா டிரெய்லர் வெளிவந்துள்ளது. டிரெய்லரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனின் சண்டையை பாராட்டி பேசி வருகிறார்கள். 

இந்த நிலையில் நடிகர் அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில்  "நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்" என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு அதில் இருந்தது. 

இது சிவகார்த்திகேயன் டிரெய்லரை விமர்சிக்கும் வகையில் அந்த பதிவு இருந்ததாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து அருண்விஜய் இன்னொரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டார். அதில் எனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு உள்ளது. சற்றுமுன்புதான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். 

இந்த  நிலையில்  பிறகு நேற்று ட்வீட் செய்த அவர், கணக்கில் ஏற்பட்ட பிரச்சனை சரியாகிவிட்டது. நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.

மேலும், இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் எனக்கு கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மதிப்பு தெரியும். இங்கு பெரியவர்கள் சிறியவர்கள் என யாரும் கிடையாது. நான் திறமைக்கு மரியாதை கொடுப்பவன். நான் யாரையும் இழிவு படுத்தியதும் கிடையாது, படுத்த நினைத்ததும் கிடையாது. நடிகர்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை திசை திருப்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

For all these years that i've been in da industry, I know da value of hardwork n patience. No one's greater or smaller.I've always respected talent n will continue 2 do so. I've never had n never need 2 demean a colleague.Kindly dont divide da healthy brotherhood we actors share. — ArunVijay (@arunvijayno1) September 2, 2018 இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியன்றில் சிவகார்த்திகேயன், நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாரை பார்த்தும் பயப்படுவதும் இல்லை. எனது அடுத்த கட்டத்தை நோக்கி மட்டுமே பயணிக்கிறேன் என்று பரபரப்பாக பேசினார்.