சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் டேனியல் திருமணம்

நகைச்சுவை நடிகர் டேனியல் - டேனிஷா திருமணம் நடைபெற்றது.

பிரபல நகைச்சுவை நடிகர் டேனியல். பையா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பொல்லாதவன், ரவுத்திரம், மரகத நாணயம், ரங்கூன், திரி, நாச்சியார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார்.

நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து தனது காதலி டேனிஷாவை பதிவு திருமணம் செய்துகொண்டார். திருமண படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “எனது அழகிய மனைவி டேனிஷாவை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் எளிமையான முறையில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். சில குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விஷயத்தை உங்களுடன் பகிராமல் இருந்தேன். கணவன்-மனைவியாக நாங்கள் தொடங்கும் பயணத்துக்கு உங்கள் நல்வாழ்த்துக்களை வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.