சினிமா செய்திகள்
மலை உச்சியில் நின்று நடிக்க பயந்துபடப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை!

மலை உச்சியில் நின்று நடிக்க பயந்த அனுபமா பிரகாஷ் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார்.
கதிரவன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம், ‘அவளுக்கென்ன அழகிய முகம்.’ ஏ.கேசவன் டைரக்டு செய்கிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். பாடல் காட்சிகளை கொடைக்கானல் மலை உச்சியில் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். மிக உயரமான இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகி அனுபமா பிரகாஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடன இயக்குனர் ஷங்கர் படமாக்கினார்.

மலை உச்சியில் நின்றபடி நடிப்பதற்கு பயந்த அனுபமா பிரகாஷ், ஓட்டலில் தனது அறை வரை சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர், யாரிடமும் சொல்லாமல் மதுரையில் இருந்து விமானம் மூலம் தனது சொந்த ஊரான டெல்லிக்கு பறந்து விட்டார்.

அது தெரியாமல் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அனுபமா பிரகாசுக்காக காத்திருந்தார்கள். பின்னர் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். அவர் டெல்லி சென்றது அதன் பிறகுதான் தெரியவந்தது. உடனே தயாரிப்பாளர் டெல்லிக்கு சென்று அவரை சமாதானப்படுத்தி மீண்டும் படப்பிடிப்புக்கு அழைத்து வந்தார்.

மலை உச்சியை தவிர்த்து, வேறு ஒரு இடத்தில் படப்பிடிப்பு தொடர்ந்தது.