சினிமா செய்திகள்
‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில்அரவிந்தசாமி ஜோடியாக ஜோதிகா

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அரவிந்தசாமி ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார்.
மணிரத்னம் டைரக்‌ஷனில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில், அரவிந்தசாமி ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். 

சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா, அதிதிராவ், மன்சூர் அலிகான் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம், 4 முக்கிய கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்ட கதை. குடும்ப உணர்வுகளின் உணர்ச்சி குவியலை வைத்து தனக்கே உரிய பாணியில் மணிரத்னம் டைரக்டு செய்திருக்கிறார். பெரும் நட்சத்திர கூட்டம் படத்தில் இடம் பெற்றுள்ளது.

துபாய், செர்பியா மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படம் வளர்ந்து இருக்கிறது.

படம், இம்மாத வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.