சினிமா செய்திகள்
சர்ச்சை கதையில் ஆடை குறைப்பு : கவர்ச்சியின் உச்சத்தில் அமலாபால்

கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வப்படுகின்றனர்.
கதாநாயகர்களுடன் காதல் காட்சிகளில் நடிக்க விரும்புவது இல்லை. கதாநாயகிகளை முதன்மைப்படுத்தும் படங்களுக்கும் வரவேற்பு உள்ளது. முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூலும் பார்க்கின்றன.

அமலாபாலும் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘ஆடை’ என்று பெயர் வைத்துள்ளனர். மேயாத மான் படத்தை டைரக்டு செய்த ரத்னகுமார் ஆடை படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் கதையை அமலாபாலுக்கு டைரக்டர் சொன்னதும் உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தை நழுவ விடக்கூடாது என்று உடனே ஒப்புக்கொண்டாராம்.

இதில் ஆடையை குறைத்து கவர்ச்சியாக ரத்த காயங்களுடன் அழுதபடி இருக்கும் அவரது முதல் தோற்ற படம் வெளியாகி அதிர வைத்துள்ளது. படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முந்தைய படங்களில் இந்த அளவுக்கு அவர் கவர்ச்சி காட்டியது இல்லை. வேறு நடிகைகளும் இவர் அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி வரவில்லை.

ஆடை படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, ‘‘வித்தியாசமான களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது காமினி கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்ப்பு ஏற்பட்டது. புதுமாதிரியான படமாக இருக்கும்’’ என்றார்.

இயக்குனர் ரத்னகுமார் கூறும்போது, ‘‘இந்த படத்தில் நடிக்க அதிக உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துகொண்டு அமலாபால் நடிக்க முன்வந்துள்ளார் சென்ற தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்ததுபோல் இன்றைய தலைமுறையை இலவச போன் தகவல்கள் சீரழித்து வருகின்றன. இதனை தோலுரிக்கும் கேளிக்கை படமாக ‘ஆடை’ தயாராகிறது. இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் விஜி சுப்பிரமணியம் தயாரிக்கிறார்’’ என்றார்.