சினிமா செய்திகள்
54 வயது நடிகரை திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையில் வீட்டை விட்டு ஓடி வந்த இளம்பெண்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து மும்பைக்கு ஓடிவந்த 24 வயது இளம்பெண் மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மும்பை

சல்மான் கானின் வயது 54. இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீடான கேலக்ஸி அபார்ட்மென்ட் கட்டிடம் அருகில்  குசும் என்ற  24 வயது இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். திடீரென அவர் அந்த கட்டிடத்தில் கேட் வழியாக உள்ளே செல்ல முயன்றார்.அப்போது அங்கு நின்றிருந்த காவலாளிகள் குசுமை பிடித்து கொண்டனர்.

காவலாளிகளுடன் குசும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விசாரணையில் தான் சிறு வயது முதலே சல்மான் கானின் தீவிர ரசிகை என்றும், அவரை திருமணம் செய்ய விரும்பியதாகவும் சல்மான் கானை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்து அவரை திருமணம் செய்வதற்காகவே தான் மும்பைக்கு வந்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இப்பெண் குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களுடன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் விசாரணையில், இப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்ற வருவதாக போலீசிடம் தெரிவித்துள்ளனர்.