பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? – பாடகர் நிக்ஜோனாஸ்

விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Update: 2018-09-09 23:00 GMT
 பிரியங்கா சோப்ராவுக்கும் அவரை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் காதல் மலர்ந்தது. அமெரிக்காவில் நிச்சயதார்த்தமும் முடிந்தது.

அதன்பிறகு மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ரா வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள நிக்ஜோனாஸ் குடும்பத்துடன் இந்தியா வந்து இருந்தார். பின்னர் இருவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்று விட்டனர். பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் நியூ யார்க்கில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? என்று நிக் ஜோனாஸ் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

‘‘பிரியங்கா சோப்ரா ஒரு நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். இருவரும் போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். அதன்பிறகு நேரில் சந்திக்கவில்லை. போனில் மட்டும் தகவல்கள் பரிமாறிக்கொண்டு இருந்தோம். 6 மாதத்துக்கு பிறகு ஒரு விழாவுக்கு இருவரும் சென்று இருந்தோம். அங்கு மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தோம்.

அதன்பிறகு ஒன்றாக வெளியே சுற்றினோம். அப்போது எங்களை இணைத்து பேசினார்கள். எங்கள் தொடர்பு பற்றி கேள்விகளும் எழுப்பினார்கள். நாங்கள் காதலிப்பதும் வெளியாகி விட்டது. இந்தியாவில் பிரியங்கா சோப்ரா வீட்டில் நடந்த சடங்கில் நான் ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன்.’’

இவ்வாறு நிக் ஜோனாஸ் கூறினார்.

மேலும் செய்திகள்