சினிமா செய்திகள்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சாமி ஸ்கொயர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பு பெற்றது. முதல் டிரைலரை 1.5 க்கொடிக்கும் அதிகமான பேர் பார்த்து உள்ளனர்.  தற்போது 2  டிரைலர் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் புதிய டிரைலர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. டிரைலர் வெளியாகி 15 மணிநேரத்தில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் பார்த்துள்ளனர். மேலும் யூடியூப் டிரெண்டிங்கிலும் முதல் இடத்தில் உள்ளது.

இதில் விக்ரம் பேசும் வசனமான, எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல... பொறுக்கி... என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற 20-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்திருக்கிறார்.