கமல்ஹாசன்,பாரதிராஜா,இளையராஜா என பால்கே விருதுக்குத் தகுதிமிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள் - வைரமுத்து

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிக்கு பாடலாசிரியர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-27 10:41 GMT
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார். 

தமிழ் சினிமாவில் இதுவரை இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர் ஆகிய இருவர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெரும் மூன்றாவது நபர் என்ற பெருமையை  ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிக்கு பாடலாசிரியர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், 'பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த் அவரை ஊர்கூடி வாழ்த்துவோம்' என கூறிய அவர், மேலும் 'கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா என்று பால்கே விருதுக்குத்  தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்' எனவும் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்