சினிமா துளிகள்
நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்?

பிரபுதேவா ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
‘மெர்க்குரி’ படத்தில் நடித்த பிரபுதேவா, அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அந்த படத்தில், ஒரு பெரிய கதாநாயகன் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். இதற்காக நயன்தாராவிடம், படக்குழுவை சேர்ந்த ஒருவர் தூது போனார்.

நயன்தாரா நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘‘சிம்புவை நான் நண்பராகத்தான் பார்த்தேன். அதனால் அவர் மீது எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஆனால், பிரபுதேவாவை என் வாழ்க்கையாக கருதினேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவர் படத்தில் நடிக்க விரும்பவில்லை’’ என்று கூறி விட்டாராம்!