சினிமா துளிகள்
“நல்லவேளை...பிழைத்தேன்!”

நடன இயக்குனர் கதாநாயகனாக நடித்த படம், பெரிய அளவில் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு படத்தில், நடன இயக்குனர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். படம், பெரிய அளவில் வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக பேசப்பட்டவர், நடிகரான இயக்குனர். அவர், திரைக்கதையில் அதை மாற்று...இதை மாற்று...என்று சொன்னதால், டைரக்டர் வேறு நாயகனை தேடிப்போனாராம்.

“நல்லவேளை நான் அவரை கதாநாயகனாக போடவில்லை. அவர் சொன்ன மாதிரி திருத்தம் செய்திருந்தால், படம் வெற்றி பெற்று இருக்காது” என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார், டைரக்டர்!