சினிமா துளிகள்
திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம்!

அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள முன்வந்து இருக்கிறார்.
அனுஷ்காவுக்கு அவருடைய பெற்றோர்கள் கடந்த 2 வருடங்களாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். பொருத்தமான மாப்பிள்ளை சிக்கவில்லை. சினிமா மீதும், நடிப்பு தொழில் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்ட அனுஷ்கா, மாப்பிள்ளை கிடைக்காததை ஒரு காரணமாக வைத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், திருமணம் செய்து கொள்ள முன்வந்து இருக்கிறார். சீக்கிரமே மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கும்படி, அவர் தனது பெற்றோர் களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்!