சினிமா துளிகள்
அதிரப்பள்ளியில், ஒரு ஆட்டம்!

கேரளாவை சேர்ந்த மாளவிகா மேனன், ‘பிரம்மா’ படத்தில் சசிகுமாரின் தங்கையாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.
மாளவிகா மேனன் ‘இவன் வேற மாதிரி’ படத்தில், கதாநாயகி சுரபியின் தங்கையாக நடித்தார். அதைத்தொடர்ந்து, ‘விழா’ படத்தில் கதாநாயகி ஆனார். ‘வெத்து வேட்டு’ படத்தில், ஆரிக்கு ஜோடியாக நடித்தார்.

இதுவரை 6 மலையாள படங்களிலும், 2 தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது மம்முட்டி நடிக்கும் ஒரு புதிய மலையாள படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில், ‘அருவா சண்ட’ படத்துக்காக, அதிரப்பள்ளியில் ஒரு கவர்ச்சி ஆட்டம் போட்டு இருக்கிறார்!