சினிமா துளிகள்
சம்பளத்தை 2 மடங்கு உயர்த்தினார்!

2 மொழி பட உலகிலும் புகழ் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருப்பவர், அந்த நடிகை.
ஒரு பழைய கதாநாயகியின் வாரிசாக அறிமுகமாகி, மிக குறுகிய காலத்தில் ‘நட்சத்திர நாயகி’யாக உயர்ந்து, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் புகழ் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருப்பவர், அந்த நடிகை. இவர் இதுவரை, ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்தார்.

மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த பின், சம்பளத்தை இரண்டு மடங்காக கூட்டி விட்டார். இப்போது அவருடைய சம்பளம், ரூ.2 கோடி!