சினிமா துளிகள்
உதட்டு முத்தம்

‘மை ஸ்டோரி’ படத்தில் பார்வதியும் பிருத்விராஜூம் உதட்டோடு உதடு இணைக்கும் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்கள்.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜூம், பல விருதுகளைக் குவித்தவருமான பார்வதியும் இணைந்து நடித்த படம் ‘என்னு நின்டே மொய்தீன்.’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, இந்த வெற்றி ஜோடி மீண்டும் ‘மை ஸ்டோரி’ என்ற படத்தில் இணைந்துள்ளது. ரோஷிணி தினகர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில், பார்வதியும் பிருத்விராஜூம் உதட் டோடு உதடு இணைக்கும் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறார்கள். தமிழில் ‘மரியான்’ படத்திற்குப் பிறகு, உதட்டு முத்தத்திற்கு எதிராக கருத்துக்களைக் கூறிவந்த பார்வதி, மீண்டும் அதுபோன்ற காட்சியில் நடித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது ரசிகர்கள் பலரும் இணையதள பக்கத்தில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.