சினிமா துளிகள்
திரில்லர் திரைப்படம்

ஒருவர் மட்டுமே நடிக்கும் வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்ட படம் உருவாகி வருகிறது.
சூர்யாவுடன் ‘24’, விஜயுடன் ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்தவர் நித்யாமேனன். இவர் தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது தெலுங்கில் ‘பிராணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். ஒருவர் மட்டுமே நடிக்கும் வித்தியாசமான திரில்லர் கதையம்சம் கொண்டதாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் மற்றும் ஆஸ்கர் விருது வென்ற ரசூல்பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்தப் படத்திற்கான ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். இதனை வெளியிட்டவர், மலையாள முன்னணி நடிகரான துல்கர் சல்மான்.