சினிமா துளிகள்
சொந்த படம் எடுத்து சூடு...!

இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.
‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தார். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்தன.

எனவே சொந்த படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார், நடிகர். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டது. முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்!