சினிமா துளிகள்
அழைப்பே இல்லாமல் ஆஜராகும் நடிகை!

அந்த நான்கெழுத்து நடிகை ஆந்திராவை சேர்ந்தவர். தனது அக்காவை தொடர்ந்து இவரும் நடிக்க வந்தார்.
 அக்கா பக்கம் வீசாத அதிர்ஷ்ட காற்று தங்கை பக்கம் வீசியது. அக்காவுக்கு வாய்ப்பு இல்லையே என்று ‘வருத்தப்படாமல்’ நடிக்க ஆரம்பித்தார். அவர் நேரம், அந்த படம் வெற்றி பெற்றது. ஆனாலும், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியவில்லை.

குள்ளமாக இருந்ததால்தானோ என்னவோ எந்த கதாநாயகனும் இவர் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. அதனால் தனது வெற்றி பட நாயகனின் தயவை நாட ஆரம்பித்தார். அவருடைய படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தினமும் அழைப்பே இல்லாமல், ஆஜராகி விடுகிறார். என்றாலும், வெற்றிப்பட நாயகன் அசைந்து கொடுக்கவில்லை. அந்த நடிகையை அவர் எந்த படத்துக்கும் சிபாரிசு செய்யவில்லை!