சினிமா துளிகள்
5 வருடங்களில், 5 படங்கள்!

மும்பையிலிருந்து இறக்குமதியானவர் நடிகை ஆஷ்னா சவேரி.
மும்பை இறக்குமதியான ஆஷ்னா சவேரி, 2014-ம் வருடத்தில் வந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். 5 வருடங்களில் அவர், 5 படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார்.

அவருடைய ‘மார்க்கெட்’ மந்த நிலையில் இருப்பதற்கு சுபாவம்தான் காரணம். யாரிடமும் நேரிலோ அல்லது போனிலோ அவர் வாய்ப்பு கேட்பதில்லையாம். சுயமரியாதை!