சினிமா துளிகள்
இசை-நாயகனின் சபதம்!

கதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தார்.
யார் கண்பட்டதோ...அவர் நடித்து வெளிவந்த 2 படங்கள் தோல்வி அடைந்து விட்டன. அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்று புரிந்து கொண்ட ‘இசை-நாயகன்,’ அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளார்.

“அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை என்று சபதம் எடுத்து இருக்கிறார். அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது!