சினிமா துளிகள்
‘பந்தா’ இல்லாத நாயகியை பாராட்டும் நகைச்சுவை!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில், துளி கூட பந்தாவே இல்லாதவர், அந்த குளிர்ச்சியான நடிகைதான் என்கிறார், ஒரு நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிகர்
. “அந்த பொண்ணு பணத்துக்கு ஆசைப்பட்டு அதிக சம்பளம் கேட்பதில்லை. மூத்த நடிகர்-நடிகைகளை பார்த்தால், எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார். ஒவ்வொரு காட்சியும் படமாகி முடிந்ததும் கேரவனுக்குள் போய் ஒளிந்து கொள்வதில்லை. எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுகிறார். பெரிய கதாநாயகி என்பதை எப்போதுமே அவர் காட்டிக் கொண்டதில்லை” என்று ‘ஐஸ்’ வைக்காத குறையாக பாராட்டிக் கொண்டே போகிறார், அந்த காமெடி மற்றும் குணச்சித்ர நடிகர்!