சினிமா துளிகள்
விஜய் புதிய படம்: முதல் முறையாக...!

விஜய் மீண்டும் அட்லீ டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார்.
விஜய் இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில், `சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்புக் காக விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் வெளி நாடு செல்ல இருக்கிறார்கள்.

இந்த படத்தை அடுத்து விஜய் மீண்டும் அட்லீ டைரக்‌ஷனில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பது, இதுதான் முதல் முறை!