சினிமா துளிகள்
கரிகாலனின் சினிமா கம்பெனி!

கஸ்தூரிராஜா டைரக்‌ஷனில் உருவான ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமானவர், கரிகாலன்.
கரிகாலன் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில், 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ‘வைரவன்’ என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிப்புடன், ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வரும் கரிகாலன், ‘காமராஜர் கனவுக் கூடம்’ என்ற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.

“சினிமா ஒரு நல்ல ஆயுதம். இதன் மூலம் இளைய தலை முறைக்கு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் வகையில், தரமான கதையம்சம் கொண்ட 10 படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறேன்” என்கிறார், கரிகாலன்!