சினிமா துளிகள்
“பின்னணி இசை, சவாலாக இருந்தது!”

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘தமிழ் படம்-2’வில், படத்தின் கதையைப் போலவே இசையும் பேசப்படுகிறது.
தமிழ் படம்-2’-க்கு  இசையமைத்தவர், கண்ணன். “நான் அடிப்படையில், ஒரு இசைப்பிரியன். என்னை, ‘தமிழ் படம்’ முதல் பாகத்தில் இசையமைப்பாளர் ஆக்கியவர், டைரக்டர் சி.எஸ்.அமுதன். அடுத்து, ‘திலகர்’ படத்துக்கு இசையமைத்தேன்.

என் மூன்றாவது படம், ‘தமிழ் படம்-2.’ இது மாதிரி படங் களுக்கு இசையமைப்பது, சிரமம் மட்டுமல்ல, சவாலும் கூட. படத்தில், மொத்தம் 13 பாடல்கள். இந்த காலத்தில் ஒரு படத்தில் பதிமூன்று பாடல்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ஆனாலும் தியேட்டர்களில் யாரும் எழுந்து போகவில்லை. படம், பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாடல்களின் இசையைப் போலவே பின்னணி இசையும் பாராட்டப்படுகிறது. இந்த படத்தின் பின்னணி இசை, எனக்கு சவாலாக இருந்தது.’’