சினிமா துளிகள்
எமிஜாக்சனும், அசைவ உணவுகளும்...!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழி படங்களிலும் நடித்து வந்த எமிஜாக்சன், முதன்முதலாக ஒரு கன்னட படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
கன்னட படத்தில் சிவராஜ்குமார், சுதீப் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முடிவடையும் நிலையில், எமிஜாக்சன் சொந்த நாடான லண்டனுக்கு சென்றார். இதனால், அந்த கன்னட படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

எமிஜாக்சன் சமீபத்தில் லண்டனில் இருந்து பெங்களூரு திரும்பினார். அதைத்தொடர்ந்து கன்னட படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. அதில், எமிஜாக்சன் கலந்து கொண்டு நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர் நிருபர்களிடம் பேசினார்.

“நான், இந்தியாவில் இருக்கும் வரை சைவ சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். அசைவ உணவுகளை தவிர்த்து வந்தேன். லண்டன் போனதும் மீண்டும் அசைவத்துக்கு மாறி விட்டேன். என்னால் அசைவ உணவுகளை மறக்க முடியவில்லை’’ என்கிறார், எமிஜாக்சன்!