சினிமா துளிகள்
விக்ரமன் மகன் கதாநாயகன் ஆகிறார்!

புதுவசந்தம், பூவே உனக்காக, கோகுலம், வானத்தைப்போல, சூர்யவம்சம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர், டைரக்டர் விக்ரமன்.
டைரக்டர் விக்ரமனின் மகன் வி.கனிஷ்கா மிக விரைவில் கதாநாயகன் ஆகிறார். இவர் 5.8 அடி உயரத்தில், ஒரு கதாநாயகனுக்கே உரிய தோற்றப் பொலிவுடன் இருக்கிறார்.

22 வயதான இவர், `பி.இ' (மெக் கானிகல்) என்ஜினீயரிங் படித்தவர். கதாநாயகன் ஆகவேண்டும் என்கிற ஆசையில், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரிடம் நடனமும், ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியனிடம் சண்டை பயிற்சியும் பெற்று இருக்கிறார்.