சினிமா துளிகள்
தீவிர வேட்டையில் பிரியம்!

தீவிர பட வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார் பிரியமாக இருக்கும் நடிகை.
நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் பிரியமாக இருக்கும் நடிகைக்கு அவர் ஆனந்தப்படுகிற அளவுக்கு ஒரு வெற்றி படம் இதுவரை அமையவில்லை. அப்படி ஒரு படத்தில் சீக்கிரமே நடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இதற்காக அவர் தீவிர வாய்ப்பு வேட்டையில் இறங்கியிருக்கிறார்.

புது பட வாய்ப்புகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்!