சினிமா துளிகள்
இது அடுத்தகட்டமாக இருக்கும்!

ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
விஜய் சேதுபதி நடித்து ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

‘‘இந்த படத்தில், ஹரீஷ் கல்யாணை முற்றிலும் வேறாக பார்க்கலாம். அவருக்கு இது அடுத்தகட்டமாக இருக்கும். அழுத்தமான கதை, ‘ஸ்டைலிஷ்’ ஆன மேக் கிங் என ஹரீஷ் கல்யாணுக்கு ஒரு அடையாளம் கொடுக்கும் படம், இது!’’ என்கிறார், டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி!