சினிமா துளிகள்
‘ஆறில் இருந்து ஆறு வரை’

மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ‘ஆறில் இருந்து ஆறுவரை’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.
புதுமுகம் கவுசிக் கதாநாயகனாகவும், குஷ்புசிங், பூஜா ஹங்குலி ஆகிய இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். ஸ்ரீஹரி டைரக்டு செய்திருக்கிறார். ரிஷிராஜ் தயாரித்து இருக்கிறார்.

ஜீவா வர்ஷினி என்ற பெண் இசையமைப்பாளர் இசையமைத்து இருக்கிறார். இவருடைய இசையில், முன்னணி கதாநாயகிகள் பற்றி ஒரு பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பாடியிருக்கிறார்.