சினிமா துளிகள்
ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்!

பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து விட்டார். அடுத்து ஒரு புதிய படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ‘போகன்’ படத்திலேயே இணைவதாக இருந்தார்கள். இருவருக்குமே ‘கால்ஷீட்’ பிரச்சினை இருந்ததால், ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணைவது தள்ளிப்போனது. அந்த வாய்ப்பு இப்போது கைகூடி இருக்கிறது!