மார்க் ஆண்டனி நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.;

Update:2023-09-19 23:19 IST

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.50 கோடியே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்