Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி.. ஜப்பான் படத்தின் புதிய அப்டேட்

நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.;

Update:2023-09-14 23:10 IST

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, "Voice மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்