மோகினி

‘மோகினி’ படத்தில் “அறிவியல் ரீதியாக பேயை காட்டியிருக்கிறோம்” - டைரக்டர் மாதேஷ் திரிஷா கதாநாயகியாக நடித்து, மாதேஷ் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் ‘மோகினி’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘சாக்லெட்,’ ‘மதுர,’ ‘அரசாங்கம்,’ ‘மிரட்டல்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், மாதேஷ். ரஜினிகாந்த் நடித்த ‘கோச்ச;

Update:2017-01-05 14:58 IST
‘மோகினி’ படத்தில் “அறிவியல் ரீதியாக பேயை காட்டியிருக்கிறோம்” - டைரக்டர் மாதேஷ்

திரிஷா கதாநாயகியாக நடித்து, மாதேஷ் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் ‘மோகினி’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ‘சாக்லெட்,’ ‘மதுர,’ ‘அரசாங்கம்,’ ‘மிரட்டல்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், மாதேஷ். ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் கிரியேட்டிவ் டைரக்டராக பணிபுரிந்தவர். ‘மோகினி’ படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“மோகினி, பயங்கர திகில் படமாக உருவாகி இருக்கிறது. படத்தில், அறிவியல் ரீதியாக பேயை காட்டியிருக்கிறோம். பேய் படத்தை வெளிநாடுகளில் படமாக்கியிருப்பது, இதன் சிறப்பு. மெக்சிகோ, தாய்லாந்து, இங்கிலாந்து, சுவீடன், மலேசியா, வியட்நாம் ஆகிய 6 நாடுகளில், 90 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்.

இது, ஒரு பூர்வ ஜென்ம கதை. 5 தலைமுறைகளுக்கு முன் இரட்டை பிறவி களாக இருந்தவர்களின் கதை. திரிஷா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். லண்டனில் படமாக்கிய ஒரு கார் துரத்தல் காட்சியிலும், வியட்நாம் காட்டுக்குள் படமாக்கிய ஒரு சண்டை காட்சியிலும் ‘டூப்’ இல்லாமல் அவரே நடித்து இருக்கிறார். சண்டை காட்சியில், 60 அடி உயரத்தில் இருந்து அவரே குதித்தார். மலேசியாவில், தண்ணீருக்கு அடியில் நடந்த சண்டை காட்சியிலும் திரிஷா துணிச்சலாக நடித்தார்.

படத்தில் அவருடைய அப்பாவாக சுரேஷ், அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் ரமா, யோகிபாபு, மயில்சாமி, சாமிநாதன், கணேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். குருதேவ், ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக்-மெர்லின் இசையமைத்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி நான் (மாதேஷ்) டைரக்டு செய்திருக்கிறேன். ‘சிங்கம்-2’ படத்தை தயாரித்த லட்சுமண், இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தை ஜனவரி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்.”

மேலும் செய்திகள்