காதல் முன்னேற்ற கழகம்

பிரித்விராஜன்-சாந்தினியுடன் காதல் முன்னேற்ற கழகம் நடிகர்-டைரக்டர் பாண்டியராஜனின் மகன் பிரித்விராஜன், ‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.;

Update:2017-01-17 15:19 IST
அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், முனீஸ் ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சிவசேனாதிபதி நடிக்கிறார்.

இது, 1980-ல் நடக்கும் கதை. ஹரீஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பி.சி.சிவன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், மாணிக் சத்யா. படத்தை தயாரிப்பவர்கள்: கோபிநாத், மலர்க்கொடி முருகன், ஆனந்த். சென்னை, ஊட்டி, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் ஆகிய இடங் களில் படம் வளர்ந்து இருக்கிறது.

மேலும் செய்திகள்