மகளிர் மட்டும்

ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து, ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா டைரக்டு செய்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.;

Update:2017-03-17 12:42 IST
ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை

 இந்த படத்தை பற்றி டைரக்டர் பிரம்மா கூறியதாவது:-
“மகளிர் மட்டும், உணர்ச்சிகரமான திரைப்படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் என்று பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைக்கதை. நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள்.

படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன், ஒத்திகை நடந்தது. கதாபாத்திரங்களின் ஆழத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக நடைபெற்ற அந்த பயிற்சி பட்டறையில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா தவிர, மற்றவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்தவர்கள். மறுபடியும் அதே ‘டைட்டிலில்’ நடிப்பது சந்தோஷமாக இருப்பதாக சொன்னார்கள்.

கொஞ்சம் மாறியிருக்கிற ஜோதிகாவாகவும் தெரிய வேண்டும். வழக்கமான ஜோதிகாவாகவும் தெரிய வேண்டும் என்று ஜோதிகா கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஆக்ரா ரோட்டில் அவர் புல்லட் ஓட்டுகிற காட்சியில், ‘பைக்’கில் பின்னால் உட்காருவதற்கு ஊர்வசி பயந்தார். யாருக்கும் தெரியாமல் கேமராவை வைத்து படமாக்கினோம். படத்தில், ஜோதிகா புல்லட் தவிர வேறு ஒரு வாகனமும் ஓட்டியிருக்கிறார். தமிழை உணர்ந்து பேசி நடித்தார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.”

மேலும் செய்திகள்