‘வேலைக்காரன்’ படத்துக்காக சினேகா, 7 கிலோ உடல் எடையை குறைத்தார்
சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி நடிக்க, மோகன் ராஜா டைரக்ஷனில், ‘வேலைக்காரன்’ படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார்.;
இந்த படத்தில், சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக இருக்கின்றன.
படத்தில் அவர் மெலிந்த தோற்றத்துடன் வர வேண்டும் என்று டைரக்டர் மோகன் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்காக, சினேகா தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டிலேயே அவர் தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். அதன் விளைவாக, இதுவரை அவர் 7 கிலோ எடை குறைந்து இருக்கிறார்.
இன்னும் 3 கிலோ எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறார். ஒரு சில நாட்களில், அவர் மெலிந்த தோற்றத்துடன் படப்பிடிப்புக்கு தயாராகி விடுவார்.
வேகமாக வளர்ந்து வரும் ‘வேலைக்காரன்’ படத்தில் பகத் பாசில், பிரகாஷ்ராஜ், ரோகிணி, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். 24 ஏ.எம். ஸ்டூடியோ சார்பில் படம் தயாராகிறது.