அரபு தாக்கு

துபாயை கதைக்களமாக கொண்டு முதன்முதலாக தமிழில் ஒரு படம் தயாராகிறது.;

Update:2017-04-15 13:04 IST
துபாயில் தயாராகும் படம் ‘அரபு தாக்கு’

 இந்த படத்துக்கு, ‘அரபு தாக்கு’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பிரான்ஸிஸ் எஸ். டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“துபாயில் தயாராகும் முதல் தமிழ் படம், இது. அரபு நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு, ‘அரபு தாக்கு’ என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகி இருக்கும். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள்? என்பதையும் சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படம், இது.

‘அதிதி’ படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் கதாநாயகனாக நடிக்கிறார். பெர்குஸார் கொரல் என்ற அரபு நடிகை கதாநாயகியாக அறிமுகமாகிறார். தம்பி ராமய்யா, ரவிமரியா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படம் தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. துபாய், ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படப் பிடிப்பை நடத்த இருக்கிறோம்.

தமிழ் மீது அளவற்ற பற்று கொண்ட ஒரு துபாய் பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற போராடும் ஒரு தமிழ் இளைஞனை பற்றிய கதை, இது.”

மேலும் செய்திகள்