யாகன்

கதாநாயகனுக்கு நடிப்பு சொல்லி கொடுத்த கதாநாயகி! ‘யாகன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சஜன் கதாநாயகனாகவும் அஞ்சனா கீர்த்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.;

Update:2017-04-27 15:26 IST
வினோத் தங்கவேல் டைரக்டு செய்துள்ளார். மாப்பனார் புரொடக்‌ஷன் சார்பில் யோகராஜா தயாரித்துள்ளார். படத்தை பற்றி டைரக்டர் வினோத் தங்கவேல் கூறும்போது, “இது, கிராமத்து பின்னணியில் நடக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களோடு ஒன்றி நடித்துள்ளனர். தேனியில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றார். நாயகன் சஜன் கூறும்போது, “எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் பார்த்து சினிமா மீது எனக்கு ஆர்வம் வந்தது. இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பின்போது, கதாநாயகி அஞ்சனா கீர்த்தி எனக்கு நடிப்பு சொல்லி கொடுத்து உதவினார்” என்றார்.

அஞ்சனா கீர்த்தி கூறும்போது, “நான் இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தேனியில் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது” என்றார்.

மேலும் செய்திகள்