கிரகணம்
கிருஷ்ணா-‘கயல்’ சந்திரனுடன் 35 நாட்கள் இரவிலேயே படமாக்கப்பட்ட திகில் படம்!;
கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள ‘கிரகணம்’ படத்தில், இளன் என்ற 21 வயது இளம் இயக்குனர் அறிமுகமாகிறார். ‘கிரகணம்’ படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-
“இந்த படத்தில் கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் ஆகிய 2 கதாநாயகர்கள் இருக்கிறார்கள். நந்தினி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கருணாஸ், ஜெயப்பிரகாஷ், கருணாகரன், ‘கும்கி’ அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ படத்துக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கிறார். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன் தயாரித்து இருக்கிறார்.
2 கதாநாயகர்களும், கதாநாயகியும் ஒரு மணி நேரத்தில், தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை. திகில் படம் என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. 35 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்.
படத்தில் 2 கதாநாயகர்கள் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் இல்லை.”