சிவகார்த்திகேயன்- சமந்தா ஜோடி சேர்ந்தார்கள்
பொன்ராம் டைரக்ஷனில் புதிய படம் சிவகார்த்திகேயன்- சமந்தா ஜோடி சேர்ந்தார்கள்.;
பொன்ராம் டைரக்ஷனில் ஆர்.டி.ராஜா ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சிவகார்த்திகேயனும், டைரக்டர் பொன்ராமும் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,’ ‘ரஜினிமுருகன்’ ஆகிய 2 படங்களில் இணைந்து பணிபுரிந்து இருக் கிறார்கள். மூன்றாவது முறையாக இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிய உள்ளனர். பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. நெப்போலியன், லால், சிம்ரன் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
டி.இமான் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏஎம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். நகைச்சுவை மற்றும் குடும்பப்பாசம் கலந்த ஜனரஞ்சகமான படமாக, அதிக பொருட்செலவில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு இன்று தொடங்கி தென்காசி, அம்பாசமுத்திரம், தேனி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. 2018-ல் கோடை விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.