ஒண்டிக்கட்ட

மண்சார்ந்த மக்களும், அவர்களின் வாழ்க்கையும் ஒண்டிக்கட்ட படம்;

Update:2017-06-20 17:56 IST
பரணி இசையமைப்பாளராக 18 வருடங்கள் பயணித்த பரணி, ‘ஒண்டிக்கட்ட’ என்ற படத்தின் மூலம் டைரக்டராகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஜெகதீஷ் கதாநாயகனாகவும், நேகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். 

படத்தை பற்றி பரணி சொல்கிறார்:- “இசையமைப்பாளராக இருந்து டைரக்டராகி இருக்கிறேன். இதுவரை நான் பெற்ற அனுபவங்களையும், கற்று தேர்ந்த விஷயங்களையும் வைத்து இந்த படத்தை  இயக்கியிருக்கிறேன். நாம் பிறக்கும்போதும்  ஒண்டிக்கட்டையாகவே பிறக்கிறோம். போகும்போதும் ஒண்டிக்கட்டையாகவே போகிறோம். இதை கருவாக வைத்து கிராமத்து பண்பாடு மற்றும் நாகரிகத்தை பதிவு செய்து இருக்கிறேன். மண்சார்ந்த மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும் படம் சித்தரிக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படம் தயாராகி இருக்கிறது.”

மேலும் செய்திகள்