ஓநாய்கள் ஜாக்கிரதை

குழந்தைகள் கடத்தலை பற்றிய படம் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ இன்றைய தமிழ் திரையுலகில் திறமையான பல குறும்பட டைரக்டர்கள் வித்தியாசமான கதைகளுடனும், விறுவிறுப்பான திரைக்கதையுடனும் வந்து வெற்றி பெற்றுள்ளனர்.;

Update:2017-07-04 15:46 IST
அந்த வரிசையில் ஒரு திகில் கதையுடன் அறிமுகமாகிறார், டைரக்டர் ஜே.பி.ஆர். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இவருடைய டைரக்‌ஷனில் உருவாகி வரும் படம், ‘ஓநாய்கள் ஜாக்கிரதை.’

இந்த படத்தை பற்றி ஜே.பி.ஆர். கூறுகிறார்:-

“குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து பயங்கர திகில் திரைக்கதையுடன் உருவாகியுள்ள படம், இது. ‘கபாலி’ பட புகழ் விஷ்வாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ‘மெட்ராஸ்,’ ‘கபாலி’ படங்களில் நடித்த ரித்விகா கதாநாயகி ஆகியிருக்கிறார். ஏ.வெங்கடேஷ், விஜய் கிருஷ்ணராஜ், நித்யா ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மகாபலிபுரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.”

மேலும் செய்திகள்