எவனும் புத்தனில்லை

2 இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் யுத்தம் ‘எவனும் புத்தனில்லை’ என்ற படத்தின் உள்ள முன்னோட்டம் பார்க்கலாம்.;

Update:2017-11-10 16:02 IST
2 இளைஞர்கள் சேர்ந்து நடத்தும் யுத்தத்தை கருவாக வைத்து, ‘எவனும் புத்தனில்லை’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தில் புதுமுகம் நபிநந்தி கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக புதுமுகம் ஷரத் நடிக்கிறார். கதாநாயகிகளாக நிகாரிகா, சுவாதிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். ஒரே ஒரு பாடல் காட்சியில், பூனம் கவுர் நடிக்கிறார்.

சங்கிலி முருகன், வேல.ராமமூர்த்தி, மாரிமுத்து, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘பசங்க’ சிவகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஒரே ஒரு பாடல் காட்சியில் சினேகனும், பூனம் கவுரும் நடிக்கிறார்கள். டி.எஸ்.சுரேஷ்குமார் வசனம் எழுத, கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார், எஸ்.விஜயசேகரன். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“உலகில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் தன் சுயநலத்துக்காக ஒருவரையொருவர் வேட்டையாடி அழிக்க முயற்சி செய்கிறார்கள். இதை எதிர்த்து ஒரு மலை கிராமத்து இளைஞன், ஒரு மருத்துவ கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் கதை.

மேலும் செய்திகள்