வினை அறியார்

ஆதரவற்ற 3 சிறுவர்கள் சின்ன சின்ன தவறுகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். படம் ‘வினை அறியார்’ முன்னோட்டம் பார்க்கலாம்.;

Update:2018-07-27 22:24 IST
ஆதரவற்ற 3 சிறுவர்கள் சின்ன சின்ன தவறுகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். 3 பேரும் திருட சென்ற இடத்தில், ஒரு பெரிய தவறு நடப்பதை பார்த்து விடுகிறார்கள். அதை அவர்கள் போலீசில் சொல்லப்போய், அது அவர்களுக்கே பிரச்சினையாக மாறுகிறது. அதில் இருந்து அந்த சிறுவர் கள் எப்படி மீண்டார்கள்? என்பதே ‘வினை அறியார்’ படத்தின் கதை என்கிறார், அந்த படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளருமான கே.டி.முருகன். இவர் மேலும் கூறுகிறார்:-

‘வினை அறியார்’ படத்தில் ‘கோலி சோடா’ புகழ் முருகேஷ், ‘தனி ஒருவன்’ புகழ் ஜாக், உதயராஜ், கமலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அன்பரசு இசையமைத்து இருக்கிறார். தஷி, பின்னணி இசையமைத்து இருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் நடந்தது. படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்