காட்டேரி

ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படம், ‘காட்டேரி.’ இந்த படத்தில் வைபவ் ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பொன்னம்பலம், கருணாகரன், ரவிமரியா, ஜான் விஜய், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.;

Update:2018-08-14 22:29 IST
குழந்தைகளை கவரும் ‘காட்டேரி’ படத்தில் வைபவ் ஜோடியாக 3 கதாநாயகிகள்! எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், டீ.கே. ‘காட்டேரி’ படம் பற்றி இவர் கூறுகிறார்:-

“காட்டேரி என்றால் ரத்தம் குடிக்கும் பேய் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால், காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்ற அர்த்தமும் இருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் உருவாக்கும் திட்டம் இருந்தது. எனக்கு தெலுங்கு தெரியாது என்பதால் தமிழில் மட்டும் உருவாக்க முடிவு செய்தோம்.

வைபவ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனம்பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சுயநலம் மிகுந்த ஒரு கதாபாத்திரத்தில் சோனம்பாஜ்வா நடிக்கிறார். மனநல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் 1960-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

ரத்தம் குடிக்காத ‘காமெடி’ பேயின் கதை, இது. குழந்தைகளை கவரும் வகையில், நகைச்சுவையாக படம் தயாராகி இருக்கிறது.”

மேலும் செய்திகள்